நாளை வரை ரியாத்தில் மழை பெய்ய வாய்ப்பு

ரியாத்- ரியாத் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சில இடங்களில் கனமழை பெய்யும். இன்று இரவும் நாளையும் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் மட்டுமின்றி, தரியா, முஸஹாமியா, ஷக்ரா, ரூமா, மஜ்மா, தாடிக், அல்காட், சுல்ஃபி, மராத், ஹுரைமாலா, தவாத்மி, அஃபிஃப், அல்குவய்யா, ஹோதா பானி தமீம் மற்றும் ஹரிக் ஆகிய இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்நிலையில், பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
(Visited 12 times, 1 visits today)