இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் 16 வயது சிறுவன் சுட்டுக் கொலை

இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரை நகரமான ரமல்லாவில் உள்ள அல்-அமாரி முகாமில் நடத்திய தாக்குதலின் போது 16 வயது சிறுவன் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்தபா அபு ஷல்பக் என்ற சிறுவனே கொல்லப்பட்டுள்ளார்.
இத்தாக்குதல் சம்பவம் அதிகாலையில் நடந்ததாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கழுத்து மற்றும் மார்பில் காயம் அடைந்த ஷல்பக், மருத்துவமனையில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
(Visited 10 times, 1 visits today)