பொரளை துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது

பொரளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 19 ஆம் திகதி பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையைச் சேர்ந்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயற்சித்த சந்தேகநபரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கிராண்ட்பாஸ் சேதவத்த பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேகநபர் இன்று (02) கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் குற்றச் செயலுக்கு சந்தேகநபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சந்தேக நபர் 22 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(Visited 16 times, 1 visits today)