சிங்கப்பூரில் வேலை இழந்தோருக்கு வெளியான தகவல்
சிங்கப்பூரில்எதிர்பாராமல் வேலை இழந்தவர்களுக்கு ஆதரவு தரும் புதிய திட்டம் பற்றி துணைப்பிரதமர் Lawrence Wong நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார்.
புதிய திட்டம், வேலையில்லாதவர்கள் பயிற்சிபெற வகை செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கான செலவு, வரிப்பணத்தில் இருந்து எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
வரவுசெலவுத் திட்ட அறிக்கை தொடர்பான விவாதங்களை ஒட்டி உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேலையில்லாதோருக்கான காப்புறுதியின் மூலம் பணம் தரவேண்டும் என்று மன்ற உறுப்பினர்கள் சிலர் சொன்ன கருத்தை அவர் நிராகரித்தார்.
நிதியமைச்சருமான திரு. வோங், எளிதில் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கும் தனிநபர்களுக்கும் ஆதரவு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தற்காலிக உதவிகளைவிட, SkillsFuture போன்ற நீண்டகால உதவித் திட்டங்களில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.