அயர்லந்தில் மரத்தைத் தூக்கி வீசியதால் 650,000 பவுண்ட் காப்புறுதிப் பணத்தை இழந்த பெண்
அயர்லந்தில் பெண் ஒருவர் கிறிஸ்துமஸ் மரத்தைத் தூக்கி வீசும் போட்டியில் வெற்றி பெற்றதால் சுமார் 650,000 பவுண்ட் காப்புறுதிப் பணத்தை இழந்துள்ளார்.
36 வயது கமிலா கிராப்ஸ்கா கார் விபத்தில் ஏற்பட்ட காயங்களுக்காகப் பணம் கோரி காப்புறுதி நிறுவனம் மீது வழக்குத் தொடுத்தார்.
2017ஆம் ஆண்டு நேர்ந்த அந்தக் கார் விபத்தால் தமது முதுகிலும் கழுத்திலும் அடிபட்டதாக அவர் கூறினார். சுமார் 5 ஆண்டுகளுக்குத் தம்மால் வேலைக்குச் செல்ல முடியாது என்றும் பிள்ளைகளுடன் விளையாட முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால் அவர் 2018ஆம் ஆண்டு 5 அடி உயம் கொண்ட கிறிஸ்துமஸ் மரத்தை தூக்கி எறியும் படம் வெளியானது. படத்தில் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் தெரிந்தாலும் தாம் வலியில் அவதியுறுவதாக கிராப்ஸ்கா விளக்கினார்.
(Visited 9 times, 1 visits today)