மும்பை ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் காயம்!!
மகாராஷ்டிரா மாநில மும்பை நகர பாந்த்ரா ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒன்பது பேர் காயம் அடைந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கோரக்பூர் நோக்கிச் சென்ற பாந்த்ர-கோரக்பூர் விரைவு ரயிலில் ஏற ஏராளமானோர் ஒரே நேரத்தில் முயற்சி செய்தனர்.
ஞாயிறு (அக்டோபர் 27) அதிகாலை 5.00 மணியளவில் தீபாவளி விடுமுறையில் தங்களுடைய சொந்த ஊருக்குச் செல்வதற்காக ஏராளமான பயணிகள் ரயில் நிலையத்தில் குவிந்தனர்.
பாந்த்ராவிலிருந்து கோரக்பூருக்குச் செல்லும் ரயில் எண் 22921 ரயில் நிலையத்தின் தாழ்வாரம் எண் 1க்கு வந்து நின்றது. அப்போது, ரயிலின் பொதுப் பெட்டியில் ஏற பலர் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு முயற்சி செய்தனர்.அப்போது கடும் நெரிசல் ஏற்பட்டது.
இதில் ஒன்பது பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக பாந்த்ரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், ஏழு பேரின் நிலைமை சீராக உள்ளதாகவும் இருவர் எலும்பு முறிவுகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஊடகங்கள் தெரிவித்தன.
ரயில் நிலையம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக ரயில்துறை தரப்பு தகவல்கள் தெரிவித்தன.
ஒரு பயணிக்கு முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டது. சில பயணிகளுக்கு கால் எலும்பில் முறிவு ஏற்பட்டது. காயமடைந்த இருவர் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளனர்.