இந்தியா செய்தி

மத்தியப் பிரதேசத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 குழந்தைகள் பலி

மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் ஷாபூர் பகுதியில் கனமழையைத் தொடர்ந்து சுவர் இடிந்து விழுந்ததில் ஒன்பது குழந்தைகள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

ஒரு பாழடைந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பல குழந்தைகள் மண்ணுக்கு அடியில் சிக்கிக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அப்பகுதியில் உள்ள குடி கோவிலுக்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிவலிங்கம் கட்டும் நிகழ்ச்சிக்காக குழந்தைகள் கூடியிருந்தனர்.

பாரிய சுவர் குழந்தைகள் மீது மோதியதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் விரைந்து வந்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 9 குழந்தைகள் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்த குழந்தைகள் துருவ் (12 வயது), நித்தேஷ் (13), அசுதோஷ் பிரஜாபதி (15), பிரின்ஸ் சாஹு (12), பர்வ் (10), திவ்யன்ஷ் (12), தேவராஜ் (12), வன்ஷ் (10), மற்றும் ஹேமந்த் (10).

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!