இலங்கையில் சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்த 08 ஆம் வகுப்பு தமிழ் மாணவி

இலங்கையில் இவ்வருடம் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய கண்டி மகளிர் உயர்தரப் பாடசாலையின் 08 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் சித்தியடைந்துள்ளார்.
அவர் உயர் பெறுபேறுகளைப் பெற்று இந்த பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.
கிறிஸ்டின் பிரங்கேஷினி என்ற மாணவி வீட்டில் சுயமாக கல்வி கற்று 2022 ஆம் ஆண்டு கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றியதோடு ஒரு ஏ சித்தியும், மூன்று பி சித்தியும் ஐந்து சி சித்தியும் பெற்றுள்ளார்.
அவரது தாயும் தந்தையும் ஆசிரியர்கள் மற்றும் சிறுமியும் அடுத்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தயாராகி வருவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
(Visited 13 times, 1 visits today)