புது வருடத்தில் பிரகாசமான பொலிவு பெற 8 டிப்ஸ்!
2025 ஆம் ஆண்டில் இனிய புத்தாண்டு தொடங்கத்தை சுறுசுறுப்பாகத் தொடங்க சரும பராமரிப்பு உங்களுக்கு உதவுகிறது. உங்கள் சருமத்தைப் பொலிவுடன் முகம் பார்க்கும் கண்ணாடியில் பார்த்து ரசிக்கும்போது உங்கள் மனதில் ஏற்படும் உற்சாக உணர்வுகளை வார்த்தையால் கூறமுடியாது. அந்த அளவுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைச் சரும பொலிவு தருகிறது. மேலும் இந்த புத்தாண்டில் சரும பராமரிப்பை எளிமையாகத் தொடங்க உங்களுக்கான சில டிப்ஸ் இங்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
முகம் கழுவுதல்: தினமும் காலை மற்றும் மாலை இருவேளை முகம் கழுவும் பழக்கத்தை இந்த புத்தாண்டிலிருந்து தொடங்குங்கள். எண்ணெய் வடியும் முகம் வைத்திருப்பவர்கள் நாளொன்றுக்கு மூன்று வேளை முகம் கழுவுதல் சருமத்திற்கு நல்லது. சருமம் பொலிவுப் பெறும்.
சன்ஸ்கிரீன் பயன்படுத்துதல்: முகம் கழுவிய பின் உங்கள் சருமத்திற்கேற்ற சன்ஸ்கிரீன் மருத்துவர் பரிந்துரைப்படி தினமும் சருமத்தில் உபயோகிக்கத் தொடங்குகள். இது உங்கள் சருமத்தைச் சூரிய ஒளியின் கதிரிலிருந்து பாதுகாக்கிறது.
நீரேற்றம்:நாளொன்றுக்கு 7 அல்லது 8 லிட்டர் தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும். சருமம் என்றும் புத்துணர்வுப்பெற தண்ணீர் குடிப்பது நல்லது.
நிம்மதியான தூக்கம்:சருமம் பொலிவு மற்றும் புத்துணர்வுக்கு நிம்மதியான தூக்கத்தின் பங்கு அதிகம் உள்ளது. எனவே சரும ஆரோக்கியத்துடன் உடல் ஆரோக்கியம் கிடைக்க நிம்மதியான தூக்கம் இருக்க வேண்டும்.
படுக்கை அறை சுத்தம்: தினமும் தூங்கும் முன் உங்கள் படுக்கை அறையைச் சுத்தம் செய்தபின் தூங்கச் செல்ல வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை தலையணை மற்றும் படுக்கை துணிகள் துவைக்க வேண்டும்.
வைட்டமின் நிறைந்த உணவுகள்: சருமம் பொலிவு மற்றும் ஆரோக்கியத்திற்கு உணவு இன்றியமையாத ஒன்று. வைட்டமின் நிறைந்த உணவுகள் குறிப்பாக வைட்டமின் சி உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவதால் முகம் பொலிவுடன் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
சரும பராமரிப்பு: சரும பராமரிப்பு என்பது வெளியில் பயணம் செய்யும் நேரத்தில் முகக்கவசம் அல்லது துணி ஏதோ ஒன்று வைத்து உங்கள் முகத்தை மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும்.