இலங்கை

சீன நிறுவனமொன்றில் அடிமைகளாக்கப்பட்ட 8 இலங்கை இளைஞர்கள்

சீன நிறுவனமொன்றில் அடிமைகளாகப் பயன்படுத்தப்பட்ட எட்டு இலங்கை இளைஞர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

தாய்லாந்தில் வேலை வாய்ப்பை வழங்குவதாகக் கூறி மியன்மாருக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையிலேயே இவ்வாறு இலங்கையர்கள் அடிமையாக்கப்பட்டுள்ளனர்.

இந்த 8 பேரில் மாரடைப்புக்கு உள்ளான அம்பாந்தோட்டையைச் சேர்ந்த இளைஞன் ஒருவரும் கடந்த 8ஆம் திகதி அங்குள்ள இருட்டு அறையில் அடைக்கப்பட்டிருந்தமையும் தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த இளைஞருக்கு அவசர இதய அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் தெரிய வந்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த இவர்களை மீட்பதற்கு உடனடியாக தலையிடுமாறு மியான்மரில் உள்ள இலங்கை தூதரகம் வெளியுறவு அமைச்சகத்துக்கு அறிவித்துள்ளது.

மியன்மார் அரசாங்கத்துடன் கலந்துரையாடி குறித்த இளைஞர்களை மியன்மார் தூதரகத்தில் ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

(Visited 3 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்