துருக்கியில் நிலத்தகராறில் 8 பேர் உயிரிழப்பு !
																																		துருக்கியில் இரு குடும்பங்களுக்கு இடையே நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று தென தியார்பாகிர் மாகாணத்தில் விவசாயக் காணித் தகராறு காரணமாக இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துருக்கியின் தென்கிழக்குப் பிராந்தியத்தில் குர்திஷ் இனத்தவர்களைப் பெரும்பான்மையகாக் கொண்ட தென தியார்பாகிர் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னர் சர்ச்சைக்குரிய வயல்பகுதி தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
மேற்படி வயல் பகுதி சுமார் 200,000 சதுரமீற்றர்கள் (50 ஏக்கர்கள்) பரப்பளவைக் கொண்டது என மாகாண ஆளுநர் அலி இசான் சூ கூறியுள்ளார்.மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
(Visited 7 times, 1 visits today)
                                    
        



                        
                            
