உலகம் செய்தி முக்கிய செய்திகள்

2025ம் ஆண்டு அதிக தங்க இருப்பை கொண்டுள்ள 8 நாடுகள்

தங்கம் என்பது உலகின் மிகவும் மதிப்புமிக்க உலோகங்களில் ஒன்றாகும். மேலும் ஒவ்வொரு நாடுகளின் பொருளாதார வலிமையைக் குறிப்பது தங்கம் ஆகும்.

அந்த வகையில் உலகில் அதிகம் தங்கம் வைத்துள்ள முதல் 08 நாடுகள் குறித்து இப்பதிவில் அறிந்துகொள்வோம்.

அமெரிக்கா

உலகில் பல துறைகளில் முதலிடத்தில் உள்ள அமெரிக்கா தங்க இருப்பு வைத்திருக்கும் நாடுகள் பட்டியலிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

2025ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அமெரிக்காவின் தங்க இருப்பு 8,133.46 டன்னாக உள்ளது. 2000 முதல் 2025 வரை அமெரிக்க தங்க இருப்பு சராசரியாக 8,134.78 டன்களாக உள்ளது.

மேலும், அமெரிக்க நாணயமான டாலரின் மதிப்பு அதிகமடைவதற்கு முக்கிய காரணம் இந்த தங்க இருப்பு ஆகும்.

ஜெர்மனி

2025ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஜெர்மனியின் தங்க இருப்பு 3,350.25 டன்னாக உள்ளது. 2000 மற்றும் 2025க்கு இடையில் நாட்டின் தங்க இருப்பு சராசரியாக 3,398.28 டன்னாக உள்ளது.

ஐரோப்பிய நாடுகளிலேயே அதிக தங்க இருப்பு வைத்திருக்கும் நாடு ஜெர்மனி ஆகும்.

இத்தாலி

2025ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் நாட்டின் இருப்பு 2,451.84 டன்களாக உள்ளது.

தங்கத்தைப் பொறுத்தவரை, இத்தாலி தனது சராசரியை தெளிவாகவும் ஒரே அளவிலும் கொண்டுள்ளது.

2000 மற்றும் 2025க்கு இடையில், இத்தாலியின் தங்க இருப்பு சராசரியாக 2,451.84 டன்களாக பதிவாகியுள்ளது.

பிரான்ஸ்

2025ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் பிரான்சின் தங்க இருப்பு 2,437 டன்னாக உள்ளது.

2000ம் முதல் ஆண்டுகளுக்கு ஏற்ப பிரான்ஸின் தங்க கையிருப்பு மாறுபட்டாலும் கடந்த சில ஆண்டுகளாக கையிருப்பு நிலையாகிவிட்டதாக அறியப்படுகிறது.

ரஷ்யா

2025ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ரஷ்யாவின் தங்க இருப்பு 2,329.63 டன்களை கொண்டுள்ளது.

2000 மற்றும் 2025க்கு இடையில் நாட்டின் தங்க இருப்பு சராசரியாக 1,181.88 டன்களாக உள்ளது.

சீனா

உலகிலேயே அதிகம் தங்கம் கையிருப்பு வைத்திருக்கும் பட்டியலில் சீனா ஆறாவது இடத்தில் உள்ளது. இதன் தங்க கையிருப்பு 2,279.6 டன் ஆகும்.

சீனா அதிக கையிருப்பை கொண்ட நாடகா மட்டுமன்றி தங்கத்தின் முக்கிய உற்பத்தியாளராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சுவிட்சர்லாந்து

அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நாடான சுவிட்சர்லாந்து அதிகளவு தங்க கையிருப்புகளையும் கொண்டுள்ளது.

சுவிட்சர்லாந்து சுமார் 1,040 டன் தங்க இருப்புகளைக் கொண்டுள்ளது.

இந்தியா

2025ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இந்தியாவின் தங்க இருப்பு 880 டன்களாக உள்ளது.

இந்தியாவின் தங்க கையிருப்பு பிற நாடுகளை விட குறைவாகவே இருந்தாலும் நாட்டில் ஆரம்பம் முதல் தற்போது வரை தங்கம் மீதான முயற்சி ஒரு சாதனை ஆகும்.

(Visited 12 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி