அரசியல் இலங்கை செய்தி

76 வருடகால சாபம்: என்.பி.பி. ஆட்சி வழங்கிய பரிகாரம் என்ன?

” ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தலைவர் ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe நாடாளுமன்றத்தில் இருப்பது நாட்டுக்கு நல்லது.”

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர Dayasiri Jayasekara தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“கடந்த கால அரசாங்கங்களை விமர்சித்து, 76 வருடகால சாபம் எனக் கூறியே தேசிய மக்கள் சக்தியினர் ஆட்சிக்கு வந்தனர். எனினும், என்.பி.பி. ஆட்சியில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றம் என்ன?

76 வருடகால “சிஸ்டம்” முறையற்றது என விமர்சித்தவர்கள், அதைவிடவும் மோசமான “சிஸ்டத்தை” தற்போது செயல்படுத்திவருகின்றனர். நாட்டில் கணக்காய்வாளர்கூட இல்லை.

அதேவேளை, நெருக்கடி நிலையில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவே நாட்டை மீட்டெடுத்தார். அவர் நாடாளுமன்றம் வருவது நல்லது.

ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைவது ஜனநாயக அரசியலுக்கு சிறந்த விடயமாகும். .” – என்றார் தயாசிறி ஜயசேகர.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!