வடகொரியா நிறுவப்பட்டதன் 75 வது ஆண்டு: புடின் மற்றும் ஜி ஜின்பிங் வாழ்த்து
வடகொரியா நிறுவப்பட்டதன் 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் சனிக்கிழமையன்று கிம் ஜாங் உன் தனது மகளுடன் “பாராமிலிட்டரி அணிவகுப்பில்” கலந்து கொண்டதாக வட கொரியாவின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக துணை இராணுவப் படைகள் மற்றும் தொழில்துறை தொழிலாளர்கள் பியோங்யாங்கின் கிம் இல் சுங் சதுக்கத்திற்கு வந்தடைந்ததாக கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரிய சென்ட்ரல் நியூஸ் ஏஜென்சியின் படி, கிம் ஜாங் உன் கிம் ஜூ ஏ என்று அழைக்கப்படும் தனது மகளுடன் அணிவகுப்பில் கலந்து கொண்டார்.
மேலும் வட கொரியாவின் 75 வது ஆண்டு விழாவில் சீனாவின் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்யாவின் விளாடிமிர் புடின் ஆகியோரிடமிருந்து வாழ்த்துக் கடிதங்களைப் பெற்றார்.
இதில் சீன துணைப் பிரதமர் லியு குவோசோங் தலைமையிலான சீனக் குழுவும், ரஷ்ய இராணுவக் கல்விக் குழுவும் பங்கேற்றுள்ளதுடன், பியோங்யாங்கில் உள்ள தூதரகப் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.