தமிழ்நாட்டில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 75 வயது கோயில் பூசாரி

தமிழ்நாட்டின் கும்பகோணம் அருகே உள்ள ஒரு கோவிலுக்குள் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 75 வயது கோயில் பூசாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் கடந்த மாதம் இந்து சமய மற்றும் அறநிலையத் துறையின் (HR&CE) கட்டுப்பாட்டில் திருவாலஞ்சுழியில் உள்ள ஒரு கோவிலில் நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட விஸ்வநாத ஐயர், பல ஆண்டுகளாக கோயிலின் தலைமை பூசாரியாகப் பணியாற்றி வந்துள்ளார்.
செப்டம்பர் 8ம் திகதி, சிறுமி தனது குடும்பத்தினருடன் தரிசனத்திற்காக கோயிலுக்கு வந்திருந்தார். காணிக்கை செலுத்துவதற்காக அவள் தனியாக உண்டியல் பெட்டி இருக்கும் பகுதிக்குச் சென்றபோது பூசாரி அவளிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
விரிவான விசாரணையைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் பூசாரி கைது செய்யப்பட்டுள்ளார்.