உத்தரகாண்டில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 7 பேர் உயிரிழப்பு
உத்தரகாண்ட்(Uttarakhand) மாநிலம் அல்மோரா(Almora) மாவட்டத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் உயிரிழந்ததாகவும் 12 பேர் காயமடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அல்மோராவில் உள்ள துவாரஹத்தில்(Dwarahat) இருந்து நைனிடாலில்(Nainital) உள்ள ராம்நகருக்கு(Ramnagar) பேருந்து சென்று கொண்டிருந்தபோது பிகியாசைன்(Bhikiasain) பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்ததாக மூத்த காவல் கண்காணிப்பாளர் தேவேந்திர பிஞ்சா(Devendra Pincha) தெரிவித்துள்ளார்.
18 முதல் 19 பயணிகள் வரை வாகனத்தில் இருந்தபோது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் பள்ளத்தாக்கில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.





