செய்தி விளையாட்டு

டி20 கிரிக்கெட்டில் முதல்முறை கில்லியாக செயல்பட்ட இந்திய அணியின் 7 பவுலர்கள்

டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஒரே போட்டியில் இந்திய அணிக்காக பவுலிங் செய்த 7 பவுலர்களும் விக்கெட் வீழ்த்திய சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இந்திய அணியில் ஆல்ரவுண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்திய மண்ணில் நடந்த உலகக்கோப்பை தொடரில் பேட்ஸ்மேன்கள் யாரும் பவுலிங் செய்யாதது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக மட்டுமே இந்திய அணி வீரர்கள் இருந்ததால், ஹர்திக் பாண்டியாவை இந்திய அணி அதிகம் நம்பியிருந்தது.

இதனால் ஹர்திக் பாண்டியா காயமடைந்த போது, இந்திய அணியின் சமநிலையை பாதித்தது.

இதனால் முன்னாள் வீரர்கள் பலரும் பேட்ஸ்மேன்கள் கைகளில் பந்தை எடுத்தால் குறைந்துபோய் விடுவார்களா என்று கொந்தளித்தனர்.

ஏனென்றால் சச்சின் டெண்டுல்கர், சேவாக், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், சவுரவ் கங்குலி என்று டாப் ஆர்டர் வீரர்கள் பலரும் குறைந்தது 5 ஓவர்களையாவது வீசும் வல்லமையுடன் இருந்து வந்தனர்.

இதனால் டாப் ஆர்டர் வீரர்கள் பவுலிங் செய்ய வேண்டும் என்ற குரல்கள் தீவிரமாக எழுந்தன.

இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் கொண்டு வரப்பட்டார்.

அதேபோல் டி20 கிரிக்கெட்டில் பவுலிங் செய்யக் கூடிய பேட்ஸ்மேன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட தொடங்கிய நிலையில், இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரிலேயே சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங் உள்ளிட்டோர் பவுலிங் செய்ய தொடங்கினர்.

தற்போது இந்திய அணியில் குறைந்தது 9 வீரர்கள் பவுலிங் செய்வது ஆச்சரியமாக உள்ளது.

வங்கதேச அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், நிதிஷ் குமார் ரெட்டி, மயங்க் யாதவ், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக், அபிஷேக் சர்மா உள்ளிட்ட 7 வீரர்கள் பவுலிங் செய்ய பயன்படுத்தப்பட்டனர்.

இதில் 7 வீரர்களும் விக்கெட் வீழ்த்தியுள்ள சம்பவம் ரசிகர்களிடையே வியப்பை அளித்துள்ளது.

டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்காக 7 பவுலர்கள் ஒரே போட்டியில் விக்கெட் வீழ்த்துவது இதுவே முதல்முறையாகும்.

அதுமட்டுமல்லாமல் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவுக்கு நேற்றைய ஆட்டத்தில் ஒரு ஓவர் கூட அளிக்கப்படவில்லை.

அவருக்கு பதிலாக நிதிஷ் குமார் ரெட்டிக்கு 4 ஓவர்கள் பவுலிங் செய்வதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இந்தப் போட்டியில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில் தீவிரமாக இருந்தார்.

பேட்ஸ்மேன்கள் அனைவரும் பவுலிங்கிலும் பங்களிக்க வேண்டும் என்பதிலும் கவனமாக இருந்தார்.

அர்ஷ்தீப் சிங், வாஷிங்டன் சுந்தர் போன்ற முழுமையான பவுலர்களை விடவும் ஆல்ரவுண்டர்களுக்கு அனுபவம் தேவை என்பதில் கவனமாக இருந்தார்.

இதனால் இந்திய டி20 அணி புதிய பாதையில் பயணிப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

(Visited 4 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி