உலகம் செய்தி

வங்கதேசத்தில் இந்து நபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 7 பேர் கைது

வங்கதேசத்தில்(Bangladesh) இந்து நபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இடைக்கால அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மைமென்சிங்(Mymensingh) நகரில் வியாழக்கிழமை கடவுளைப் பற்றி அவதூறாகப் பேசியதாக கூறி 25 வயதான திபு சந்திர தாஸ்(Thibu Chandra Das) ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டு பின்னர் அவரது உடல் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் ஏழு நபர்களை விரைவு நடவடிக்கை பட்டாலியன்(RAB) கைது செய்துள்ளதாக தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ்(Mohammad Yunus) தலைமையிலான இடைக்கால அரசு Xல் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்டவர்களின் வயது 19 முதல் 46 வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையின் கூற்றுப்படி, தொழிற்சாலை ஊழியரான திபு சந்திர தாஸ், கடவுளைப் பற்றி அவதூறாகப் பேசி குற்றச்சாட்டுகளுக்காக தொழிற்சாலைக்கு வெளியே ஒரு கும்பலால் முதலில் தாக்கப்பட்டு பின்னர் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!