இலங்கை – தாய்லாந்துக்கு இடையிலான 6 ஆவது இருதரப்பு அரசியல் பேச்சுவார்த்தைகள்

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான 06வது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைகள் 25 மார்ச் 2025 அன்று பேங்காக்கில் உள்ள தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சில் நடைபெறவுள்ளது.
இந்த ஆலோசனைகளுக்கு வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் செயலாளர்/ அருணி ரணராஜா மற்றும் தாய்லாந்தின் வெளிவிவகாரங்களுக்கான நிரந்தர செயலாளர் எக்சிரி பிந்தருச்சி ஆகியோர் தலைமை தாங்குவார்கள்.
எதிர்வரும் ஆகஸ்ட் 2023 இல் கொழும்பில் நடைபெற்ற 5வது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைகள் மற்றும் 2024 பெப்ரவரியில் தாய்லாந்து முன்னாள் பிரதமரின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து எதிர்வரும் ஆலோசனைகள் மீளாய்வு செய்யப்படும்.
இந்த ஆண்டு இலங்கை மற்றும் தாய்லாந்து இராஜதந்திர உறவுகளின் 70 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிலையில், அரசியல் ஈடுபாடு, வர்த்தகம் மற்றும் முதலீடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மீன்பிடி மற்றும் விவசாயத் துறை ஒத்துழைப்பு, பாதுகாப்பு, கலாச்சாரம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்படும்.