இந்தியா செய்தி

திடீரென லிஃப்ட் அறுந்து விழுந்ததில் 6 பேர் பலி

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், பால்காமில் அண்மையில் 40 மாடிக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது, இந்தக் கட்டிடத்தின் மேல் தளத்தின் கட்டுமானப் பணிகள் இன்று (11) தொடர்ந்தன.

இந்நிலையில், தொழிலாளர்கள் பணியை முடித்துக் கொண்டு கீழே சென்று கொண்டிருந்த போது, ​​திடீரென லிஃப்ட் (லிப்ட்) கீழே விழுந்து 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த சம்பவத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் செய்தி கிடைத்ததும் பொலிஸாரும் தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 11 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி