அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsApp பயனர்களின் கணக்குகள் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

டிஜிட்டல் மோசடிகள் அதிகரித்து வரும் இந்நேரத்தில், வாட்ஸ்அப் புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் பயனர்கள் சந்தேகத்திற்குரிய அல்லது அறிமுகமில்லாத குழுக்களில் இணைவதைத் தவிர்க்கலாம்.

Safety Overview என்றால் என்ன?

‘சேஃப்டி ஓவர்வியூ’ என்றழைக்கப்படும் இந்த அம்சம், உங்களின் தொடர்பில் இல்லாத ஒருவர் உங்களை குழுவில் சேர்க்கும்போது தோன்றும். இது மோசடி செய்பவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் உத்தி. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய அம்சம், குழு அழைப்புகளைத் தொந்தரவில்லாமல் மேலும் வெளிப்படையாக மாற்றும். உங்களை புதிய நபர் ஒரு குழுவில் சேர்க்கும்போது, அந்தக் குழுவைப் பற்றிய முக்கிய தகவல்கள் உங்களுக்குக் காண்பிக்கப்படும்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

அதாவது, யார் அந்தக் குழுவை உருவாக்கினார்கள், அதில் எத்தனை பேர் இருக்கிறார்கள், மேலும் பொதுவான பாதுகாப்பு குறிப்புகள் ஆகியவை நீங்கள் குழுவில் உள்ள செய்திகளைப் பார்ப்பதற்கு முன்பே உங்களுக்குத் தெரியும். நீங்கள் அந்தக் குழுவில் இருந்து வெளியேறலாம் அல்லது குழு உங்களுக்கு பரிச்சயமானதாக இருந்தால், அதில் உள்ள செய்திகளைப் பார்க்கலாம். நீங்கள் முடிவெடுக்கும் வரை, அக்குழுவின் அறிவிப்புகள் முடக்கப்படும்.

பயனர்களை மோசடிகளில் இருந்து பாதுகாக்க வாட்ஸ்அப் தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வாட்ஸ்அப் மற்றும் மெட்டாவின் பாதுகாப்பு குழுக்கள், தென்கிழக்கு ஆசியாவிலிருந்து செயல்படும் பெரிய அளவிலான மோசடி மையங்களை கண்டறிந்து முடக்கி வருகின்றன. இந்த மோசடி மையங்கள் பெரும்பாலும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற குழுக்களால் இயக்கப்படுகின்றன. இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும், வாட்ஸ்அப் மற்றும் மெட்டாவின் பாதுகாப்புக் குழுக்கள் 6.8 மில்லியனுக்கும் அதிகமான மோசடி கணக்குகளைக் கண்டறிந்து முடக்கியுள்ளன.

அண்மையில் OpenAI, Meta, மற்றும் WhatsApp ஆகியவை இணைந்து கம்போடியாவில் நடந்த மோசடியை முறியடித்தன. இந்த மோசடியில், ChatGPT-ஐப் பயன்படுத்தி ஆரம்ப செய்திகளை உருவாக்கினர். இந்த செய்திகள், மக்களை வாட்ஸ்அப் சாட்களுக்கு அழைத்துச் சென்றன, பின்னர் அங்கிருந்து டெலிகிராமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, ‘வீடியோக்களுக்கு லைக் செய்வது’ போன்ற போலியான வேலைகளை வழங்குவதாகக் கூறி பணத்தைப் பெற்றுள்ளனர்.

உங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி?

புதிய அம்சங்கள் மற்றும் அமலாக்க முயற்சிகள் பாதுகாப்பை அதிகரித்தாலும், பயனர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். சந்தேகத்திற்குரிய செய்திகளுக்குப் பதிலளிப்பதற்கு முன், அதுவும் அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் செய்திகள் மற்றும் உடனடி நிதி ஆதாயங்களை உறுதியளிக்கும் செய்திகள் குறித்து எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.

வாட்ஸ்அப்பின் உள்ளமைக்கப்பட்ட அம்சங்களைப் பயன்படுத்த வேண்டும். அதாவது, உங்களைத் தொடர்புகொள்ளக்கூடியவர்கள் மற்றும் உங்களின் ஆன்லைன் நிலையைக் காணக்கூடியவர்களைத் தனிப்பயனாக்க, தனியுரிமைச் சரிபார்ப்பைச் (privacy checkup) செய்ய வேண்டும். கணக்குத் திருட்டுகளைத் தடுக்க, two-step verification இயக்க வேண்டும். சந்தேகத்திற்குரிய செய்தி வந்தால், உடனடியாக block மற்றும் report அம்சத்தைப் பயன்படுத்த வேண்டும். ‘அறிமுகமில்லாத அழைப்பாளர்களை அமைதிப்படுத்து’ (Silence Unknown Callers) அம்சத்தை ஆன் செய்வதன் மூலம் அழைப்பு அடிப்படையிலான மோசடிகளைத் தவிர்க்கலாம். தீங்கிழைக்கும் போலியான பதிப்புகளைத் தவிர்க்க, நீங்கள் எப்போதும் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் செயலியை மட்டுமே பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்
Skip to content