இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 56 மத குருமார்கள் சிறையில்! வெளியான அதிர்ச்சி தகவல்

கொலை, பலாத்காரம், பாரிய பாலியல் துஷ்பிரயோகம், பணமோசடி மற்றும் புதையல் தோண்டல் ஆகிய குற்றச்சாட்டில் 56 மதகுருமார்கள் சிறையில் உள்ளதாக நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன இன்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மாத்தறை மாவட்ட சபை உறுப்பினர் டலஸ் அழகப்பெரும எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜயரத்ன மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

”இவர்களில் 29 பௌத்த தேரர்கள், 03 இந்து மதகுருமார்கள், 02 மௌலவிகள் கைதிகள் என்ற அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்,

19 பௌத்த தேரர்கள் மற்றும் 01 கத்தோலிக்க மதகுருமார்கள் சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

மேலும், 2 பௌத்த தேரர்களும், 01 இந்து குருக்களும் படுகொலை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 01 கத்தோலிக்க பாதிரியார் சந்தேகத்தின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நிதி மோசடி குற்றச்சாட்டில் 2 தேரர்களும் 1 இந்து மதகுருவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 03 பௌத்த தேரர்கள் சிறையில் உள்ளனர். கொடூர பாலியல் குற்றச்சாட்டுடன் 02 பௌத்த தேரர்கள் சிறையில் உள்ளனர்.

இந்த குற்றச்சாட்டில் இந்து, முஸ்லிம் மற்றும் கத்தோலிக்க மதகுருமார்கள் சேர்க்கப்படவில்லை. சிறார்கள் மற்றும் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 20 பௌத்த தேரர்களும் 01 இந்து மதகுருமார்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

48 பௌத்த தேரர்கள், 03 இந்து குருக்கள், 01 மௌலவிகள் மற்றும் 04 கத்தோலிக்க மதகுருமார்கள் இந்த சிறைகளில் கைதிகளாக உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!