காத்தான்குடியில் கேரளா கஞ்சாவுடன் 55 வயதுடைய வியாபாரி கைது

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்ட பொலிசார் அங்கு ஒரு கிலோ 659 கிராம் கேரளா கஞ்சாவுடன் 55 வயதுடைய வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளதாக மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி டி.எஸ்.எஸ்.கே. தெலங்காவலகே தெரிவித்தார்.
மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள குறித்த வீட்டை பொலிஸார் முற்றுகையிட்டனர்.
இதன் போது வியாபாரத்துக்காக கொண்டுவரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ 659 கிராம் கேரளா கஞ்சாவை மீட்டதுடன் 55 வயதுடைய ஒருவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் நீண்டகாலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ள நிலையில், விசாரணையின் பின்னர் சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்
(Visited 11 times, 1 visits today)