ஜெர்மனியில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 540 யூரோ கொடுப்பனவு
ஜெர்மனி நாட்டில் ஓய்வூதியம் பெற்றுக்கொண்டிருப்பவர்களுக்கு 540 யூரோ வழங்கப்படவுள்ளது.
21 மில்லியன் ஜெர்மனியர்கள் தற்பொழுது ஓய்வு ஊதியம் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் எதிர்வரும் ஆடி மாதம் தொடக்கம் 540 யுரோ மேலதிக பணமாக வழங்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதாவது இந்த 540 யூரோ என்று சொல்லப்படுவது வருடாந்தத்துக்கு வழங்கப்படுகின்ற அதிகரிப்பாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மேற்கு ஜெர்மனி பிரதேசத்தில் ஓய்வூதியத்தினுடைய உயர்வு கிழக்கு ஜெர்மனியுடன் ஒப்பிடும் பொழுது குறைவாக காணப்படும்.
மேலும் மேற்கு ஜெர்மனியில் ஓய்வூதியத்தை பெறுகின்ற நபர் 1000 யுரோ வை பெறுவார் என்றால் அவருக்கு 1044 யூரோவாக எதிர்வரும் காலங்களில் அதிகரிக்கப்படும்.
இதேவேளையில் கிழக்கு ஜெர்மனியில் 1000 யுரோவை ஓய்வு ஊதியமாக பெறுகின்றவர் மாதாந்தம் 1060 யூரோவை 1.7.2023 இல் இருந்து பெற்றுக்கொள்வார் என்றும் தெரியவந்துள்ளது.
ஜெர்மனியின் பிரபல பத்திரிகை இத்தகவலை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.