இத்தாலியில் ப்ரோக்கோலி சாண்ட்விச் சாப்பிட்ட 52 வயது இசைக்கலைஞர் மரணம்

கலாப்ரியாவின் டயமண்டேவில் உள்ள ஒரு தெரு உணவு விற்பனையாளரிடமிருந்து ப்ரோக்கோலி மற்றும் தொத்திறைச்சி(sausage) சாண்ட்விச்சை சாப்பிட்ட பிறகு 52 வயதான இத்தாலிய இசைக்கலைஞர் லூய்கி டி சர்னோ உயிரிழந்துள்ளார்.
சாண்ட்விச்சில் ஒரு கொடிய நச்சு கலந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதே உணவை உட்கொண்ட ஒன்பது பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அறிக்கையின்படி, சாண்ட்விச்சை சாப்பிட்ட பிறகு சர்னோ சரிந்து விழுந்தார். அவர், இரண்டு இளைஞர்கள் மற்றும் சர்னோவின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட மற்ற பாதிக்கப்பட்டவர்களுடன் அருகிலுள்ள அன்னுன்சியாட்டா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
(Visited 1 times, 1 visits today)