இலங்கையில் சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்ட 51 வாகனங்கள் குறித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
இலங்கையில் சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்ட 51 வாகனங்களை வேறு தரப்பினருக்கு மாற்றுவதை தடுக்கும் வகையில் கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (05) மோட்டார் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் திரு.பிரசன்ன அல்விஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
2015 மற்றும் 2019 க்கு இடையில் 51 வாகனங்களை சட்டவிரோதமாக பதிவு செய்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
(Visited 11 times, 1 visits today)





