500 கிலோ வரை தயாரிக்கும் திறன் உள்ளது
கோவை இளம் தலைமுறையினரை கவரும் பிரத்தியேக நகைகளை எமரால்டு ஜுவல்லரி குழுமத்தின் ஓர் அங்கமான ஜுவல் ஒன் கோவையில் அறிமுகம் செய்துள்ளது.
கோவையில் எமரால்டு குழுமத்தின் அங்கமான ஜுவல் ஒன் நிறுவனம் இளம் தலைமுறையினரை கவரும் வகையில் பிரத்தியேக நகைகளை அறிமுகம் செய்துள்ளது.
சர்வதேச அளவில் தங்க நகை உற்பத்தியை செய்யும் எமரால்டு ஜுவல்லரி குழுமத்தின் அங்கமான ஜுவல் ஒன் நிறுவனம் இன்று குறைந்த எடையில், அழகிய எலைட் டிசைன்களில், காலத்திற்கேற்ற ட்ரெண்டான கலெக்ஷனில் ஜெ.ஓ என்ற ஜுவல்லரி கலெக்சனை அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஜெ. ஓ கலெக்சன் தமிழகம் முழுவதும் உள்ள 55 க்கும் மேற்பட்ட ஜுவல் ஒன் ஷோரூம்களிலும், 12 ஜுவல் ஒன் பிரத்தியேக ஷோரூம்களிலும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் வகையில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இளம் தலைமுறையினர் மற்றும் பணிக்கு செல்லும் பெண்கள் வாங்கும் அளவிற்கு பிரத்தியேகமாக மிகக்குறைந்த விலையில் நகைகளை வடிவமைத்து விற்பனைக்கு இன்று அறிமுகம் செய்துள்ளது.
பெஸ்ட் குவாலிட்டி, பெஸ்ட் பியூரிட்டி, பெஸ்ட் டிசைன் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி இந்த நகைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அறிமுகம் செய்து வைத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கோவை துடியலூர் அடுத்துள்ள ராக்கிபாளையம் பகுதியில் செயல்படும் கோவை ஜுவல் ஒன் எக்ஸ்பீரியன்ஸ் சென்டரில் குத்துவிளக்கு ஏற்றி நடைபெற்ற இந்த அறிமுகத்தை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
இந்த செய்தியாளர் சந்திப்பில் எமரால்டு ஜுவல்லரி சேர்மன் கே.ஸ்ரீனிவாசன் மற்றும்.
அந்நிறுவனத்தின் இயக்குனர் தியான் ஸ்ரீனிவாசன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது..
இன்று ஜெ.ஓ., ஜுவல்லரி லான்ச் செய்துள்ளோம். இளம் தலைமுறையினரை கவரும் வகையில் பிரத்தியேகமாக துவங்கப்பட்டுள்ளது. இது நல்ல வரவேற்பை கொடுக்கும். இந்த நகைகள் இளம் தலைமுறையினரின் தேவையை பூர்த்தி செய்யும். இன்று 55 இடங்களில் லான்ச் செய்துள்ளோம்.
அதேபோல பிரத்தியேக 12 ஷோரூம்களிலும் லான்ச் செய்துள்ளோம்.வேலைக்குப் போகும் பெண்கள் வாங்கும் வகையிலான எடை குறைவான ஒரு கிராம் அளவிலான நகைகள் அறிமுகம் செய்துள்ளோம். இந்த நகைகள் பல கேட்டகிரியில் உள்ளது. இந்த நகைகள் அழகு மட்டுமல்லாது.
அணிவதற்கும் ஏற்ற நிலையில் இருக்கும். நகைகள் அணிந்திருப்பது போலவே தெரியாத அளவிற்கு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த கலெக்ஷனை நாங்கள் லான்ச் செய்துள்ளோம்.
முதல் தரத்தில் இந்த நகைகள் தயாரிக்கிறோம்.
எமரால்டு நிறுவனம் ஆசிய அளவில் பெரிய நிறுவனம். வருடத்திற்கு 45 டன் தங்க நகைகளை இங்கு தயாரிக்க கூடிய அளவிற்கு திறன் உள்ளது. அதேபோல வெள்ளியில் 70 டன் தயாரிக்கும் திறன் உள்ளது.
வைரம் 50,000 கேரட் தயாரிக்கும் திறன் உள்ளது. பிளாட்டினம் 500 கிலோ வரை தயாரிக்கும் திறன் உள்ளது.இப்படி பெரிய திறன் கொண்ட எமரால்டு நிறுவனத்தின் விற்பனை நிறுவனம் ஜுவல் ஒன்.
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் இன்று ஜெ.ஓ. கலெக்சனை லான்ச் செய்துள்ளது.பெஸ்ட் குவாலிட்டி, பெஸ்ட் பியூரிட்டி, பெஸ்ட் டிசைன் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி ஜுவல் ஒன் செயல்படுகிறது.
மேலும் இந்த கலெக்ஷனில் கீழ் ரோஸ் கோல்ட் நகைகளும், ஐரோப்பாவை சேர்ந்த பெர்ஷோஷா கற்கள் பதிக்கப்பட்ட நகைகளும் விற்பனைக்கு உள்ளன. ஏழாயிரம் ரூபாயிலிருந்து இந்த நகைகள் விற்பனைக்கு உள்ளது மேலும் இந்த நகையில் பதிக்கப்பட்டுள்ள.
கற்கள் பார்வைக்கு மிகவும் அழகாக இருக்கும்.உலகத்தில் இந்திய கலாச்சார நகைகள் எங்கு எங்கு விற்பனை செய்யப்படுகிறதோ அங்கெல்லாம் எங்கள் கலெக்ஷன் இருக்கும்.
எங்களிடம் ஆறு லட்சம் டிசைன்ஸ் உள்ளது. தங்கம் விலை உயர்ந்து வருகிறது இருப்பினும் 30 டன் நகையை தயாரிக்கும் திட்டத்தில் உள்ளோம். இவ்வாறு தெரிவித்தனர்.
இந்த சந்திப்பின் போது சேர்மன் – ஸ்ரீனிவாசன்,இயக்குநர்.
தியான் ஸ்ரீனிவாசன், ஸ்டார் பிக் பஜார் நிறுவன நிர்வாக இயக்குனர் பிரபு, மற்றும் பிரியங்கா ரங்கராஜன் ஆகியோரும் உடன் இருந்தனர்.