ஐரோப்பா

ரஷ்யா மீது 500 பொருளாதாரத் தடைகள் – அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

உக்ரைனுக்கு எதிரான போர் நீடித்து வரும் நிலை ரஷ்யா மீது 500 பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடுத்த போர் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ரஷ்யாவின் எதிர்க்கட்சியைச் சேர்ந்த அலெக்சி நவல்னி சிறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நவல்னியின் சிறைத்தண்டனைக்கு காரணமாக இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட தனிநபர்களுக்குப் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

பல்வேறு ரஷ்யாவின் நிதி ஆதார அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் அதிகார வரம்பு மீறலுக்கு உள்நாட்டிலும் வெளியிலும் புதின் விலையைக்கொடுத்தே ஆக வேண்டும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!