இலங்கை சிறைச்சாலைகளில் 50 பேர் உயிரிழப்பு!
இலங்கையில் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் 50 கைதிகள் உயிரிழந்துள்ளனர்.
தவறான முடிவு, சுகவீனம் மற்றும் தாக்குதல்கள் என்பனவற்றால் இவர்கள் உயிரிழந்துள்ளனர் என சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் காமினி பி .திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் சிறைச்சாலைகளுக்குள் 209 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
(Visited 14 times, 1 visits today)





