50 ஆண்டுகள் பழமையான அரச மரம் வெட்டப்பட்டதை கண்டித்து பசுமை தாயகம் சார்பில் ஆர்ப்பாட்டம்
சென்னை அடுத்த குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே சுமார் 50 ஆண்டுகள் பழமையான அரச மரத்தை தாம்பதம் மாநகராட்சி ரயில்வே சுரங்கப்பாதைன்பணிக்காக அன்மையில் வெட்டி அகற்றியது.
இந்நிலையில் சில சமூக அமைப்புகள் மரம் வெட்டப்பதை கண்டித்தும் மரத்திற்கு மலர் தூவியும் அஞ்சலி செலுத்தி வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே வெட்டப்பட்ட மரத்திற்கு பசுமை தாயகம் சார்பில் மலர் தூவி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாமகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எ.கே மூர்த்தி கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து எ.கே மூர்த்தி எந்த வித காரணமும் இன்றி மக்களுக்கு மழை வெயில் காலங்களில் நண்பனாக இருந்த மரத்தை வெட்டி சாய்த்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
மேலும் ஒரு மரத்தை வெட்டினால் 100 மரங்களை நட நீதிமன்ற கூறியிருப்பதை சுட்டிக்காட்டி தாம்பரத்தில் 100 மரங்களை நடவு செய்ய மாந்கராட்சி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். மக்களுக்கு தொந்தரவு இல்லாமல் இருக்கு மரங்கள் எங்கு வெட்டி அகற்றப்படுகிறதோ அங்கெல்லாம் பசுமைத்தாயகம் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் அவர் கூறினார்