சிங்கப்பூரில் 5 இந்திய வம்சாவளியினருக்கு சிறை தண்டனை

சிங்கப்பூர் ஹோட்டலில் முன்னாள் பவுன்சர் ஒருவரின் மரணத்திற்கு வழிவகுத்த கலவரத்தில் ஈடுபட்டதற்காக ஐந்து இந்திய வம்சாவளி ஆண்களுக்கு இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி விதிக்கப்பட்டது.
ஸ்ரீதரன் இளங்கோவனுக்கு 36 மாத சிறைத்தண்டனையும் ஆறு பிரம்படியும்; மனோஜ்குமார் வேலயநாதனுக்கு 30 மாத சிறைத்தண்டனையும் நான்கு பிரம்படியும்; சசிகுமார் பகீர்சாமிக்கு 24 மாத சிறைத்தண்டனையும் இரண்டு பிரம்படியும்; புத்தன்வில்லா கீத் பீட்டருக்கு 26 மாத சிறைத்தண்டனையும் மூன்று பிரம்படியும்; ராஜா ரிஷிக்கு 30 மாத சிறைத்தண்டனையும் நான்கு பிரம்படியும் விதிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு சிங்கப்பூரின் கான்கார்ட் ஹோட்டல் மற்றும் ஷாப்பிங் மாலில் கலவரம் செய்த குற்றச்சாட்டில் அவர்கள் ஒவ்வொருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது.
30 வயது ஸ்ரீதரன், 32 வயது மனோஜ்குமார் மற்றும் 34 வயது சசிகுமார் ஆகியோர் ஒரு ரகசிய சமூகக் குழுவின் உறுப்பினர்கள்.