வடக்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 குழந்தைகள் மரணம்
																																		வடக்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஐந்து குழந்தைகள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஷாதி அகதிகள் முகாமில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் குழுவை இஸ்ரேலிய ஆளில்லா விமானம் தாக்கியதாகவும், தாக்குதலில் பலர் காயமடைந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 நாட்களில், வடக்கு காசா மீது இஸ்ரேலியப் படைகள் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகின்றன.
UNRWAன் கூற்றுப்படி, தெற்கு நோக்கி தப்பிச் செல்ல முயன்ற குடியிருப்பாளர்கள் சுடப்பட்டதால், வடக்கில் சுமார் 400,000 பேர் சிக்கியுள்ளனர்.
தெற்கில் பாதுகாப்பான பகுதிகள் இல்லாததால் தொடர்ந்து இருக்க முடிவு செய்தவர்களும் பலமுறை பாதிக்கப்பட்டுள்ளனர்.
(Visited 6 times, 1 visits today)
                                    
        



                        
                            
