5 மாதத்தில் 20 ஆயிரம் பேரை இழந்த ரஷ்யா!

உக்ரேன் யுத்தத்தினால் 5 மாதங்களில் 20000 இற்கம் அதிகமான ரஷ்ய படையினர் உயிரிழந்துள்ளனர் எனவும் 80000 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
உக்ரேனின் கிழக்குப் பகுதியில் குறிப்பாக பக்முத் பிராந்தியத்தில் நடந்த மோதல்களில் ரஷ்ய படையினர் இந்த இழப்புகளை எதிர்கொண்டுள்ளனர் என தேசிய பாதுகாப்புப் பேரரவையின் பேச்சாளர் ஜோன் கேர்பி தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த ரஷ்யர்களில் பெரும்பாலானோர் வாக்னேர் எனும் தனியார் கூலிப்படையின் சிப்பாய்க்ள எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உக்ரேனியர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்த தகவல்களை தான் வெளியிடப் போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(Visited 11 times, 1 visits today)