மருத்துவ தற்கொலைக்கு விண்ணப்பித்த 48 வயதான கனடிய நடிகை
கனடிய(Canada) நடிகையும் நகைச்சுவை நடிகருமான 48 வயது கிளேர் ப்ரோஸ்ஸோ(Claire Brosso), கடுமையான மனநல நிலைமைகளுடன் வாழ்நாள் முழுவதும் போராடியதைத் தொடர்ந்து கனடாவின் மெடிக்கல் எய்ட் இன் டையிங் (Medical Aid in Dying) திட்டத்தின் கீழ் மருத்துவ உதவியுடன் மரணத்திற்கு ஒப்புதல் கோரி விண்ணப்பித்துள்ளார்.
கிளேர் 48 வயதில் மனச்சோர்வு, பதட்டம், போதைப்பொருள் துஷ்பிரயோகக் கோளாறு, நாள்பட்ட தற்கொலை எண்ணங்கள் மற்றும் பிற மனநல சவால்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுடன் போராடி வருகிறார் என்று அவர் நியூயார்க் டைம்ஸுக்கு(New York Times) அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஒரு பதிவில், ப்ரோஸ்ஸோ மனநலம் தொடர்பான தனது போராட்டங்களுக்கு மத்தியில் பலமுறை தற்கொலைக்கு முயன்றதை வெளிப்படுத்தினார்.
துணை அல்லது குழந்தைகள் இல்லாத நடிகை, தனது துன்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கனடாவின் மெடிக்கல் எய்ட் இன் டையிங் திட்டத்திற்கு 2021ல் விண்ணப்பித்தார்.
இந்தத் திட்டம் மோசமான மற்றும் குணப்படுத்த முடியாத மருத்துவ நிலைமைகள் உள்ள நோயாளிகள் ஒரு மருத்துவரின் உதவியுடன் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ள அனுமதிக்கிறது.
ஆனால் மனநல நிலைமைகள் மீதான கட்டுப்பாடுகள் காரணமாக ப்ரோஸ்ஸோவின் விண்ணப்பம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.





