இந்தியா செய்தி

400 மணி நேரப் போராட்டம்!!! சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட 41 தொழிலாளர்கள்

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதையில் 17 நாட்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் சிக்கியுள்ள இடத்திற்கு நிவாரணப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு, தீவிர நடவடிக்கையின் பின்னர் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சுரங்கப்பாதையின் நுழைவாயிலுக்கு அருகில் 41 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதனால் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இடிந்து விழுந்த சுரங்கப்பாதையின் இடிபாடுகள் வழியாக 90 செமீ விட்டம் கொண்ட குழாய் மூலம் தொழிலாளர்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுரங்கப்பாதையில் இருந்து உறவினர்கள் வெளியே வரும் வரை குறித்த தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் சுரங்கப்பாதையின் நுழைவாயிலுக்கு அருகில் தங்கியிருந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிலச்சரிவு காரணமாக, கடந்த 12ம் திகதி சுரங்கப்பாதையில் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

(Visited 6 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி