இந்தியா செய்தி

குஜராத்தில் ரசாயன ஆலையில் நச்சு வாயுவை சுவாசித்த 4 தொழிலாளர்கள் மரணம்

குஜராத்தின் பரூச் மாவட்டத்தில் உள்ள தஹேஜ் என்ற இடத்தில் உள்ள ஒரு ரசாயன ஆலையில் வாயு கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து நச்சுப் புகையை சுவாசித்து நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

நான்கு பேருக்கும் உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் ஆனால் காப்பாற்ற முடியவில்லை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் உறவினருக்கும் 30 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் ஃப்ளூரோகெமிக்கல்ஸ் லிமிடெட் (GFL) உற்பத்தி பிரிவில் குழாயில் இருந்து விஷப் புகை கசிந்ததால் ஒரு நிறுவன ஊழியர் மற்றும் மூன்று ஒப்பந்தத் தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர் என்று தஹேஜ் காவல் நிலைய ஆய்வாளர் படிதார் தெரிவித்தார்.

சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

(Visited 42 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி