தோனி, விராட் வாய்ப்பு கொடுக்காததால் ஓய்வு பெற்ற 4 வீரர்கள்
இந்திய கிரிக்கெட் அணி எம்எஸ் தோனி தலைமையில் சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு கோப்பைகளை வென்று அசத்தியது. அவருக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பு விராட் கோலிக்கு சென்றது. ஐசிசி கோப்பைகளை இவரது தலைமையில் இந்திய அணி வெல்லவில்லை என்றாலும் டெஸ்ட் மற்றும் ஒருநாள், டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்தது. அதேநேரத்தில் இவர்களது கேப்டன்சியில் இளம் வீரர்கள் பலரும் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றனர். அதனால் சில பிளேயர்களுக்கு போதுமான வாய்ப்பு கிடைக்காததால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முன்கூட்டியே ஓய்வை அறிவித்தனர்.
1. அம்பத்தி ராயுடு
இந்திய அணிக்காக விளையாடி இருக்க வேண்டிய பிளேயர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் அம்பத்தி ராயுடு. இவருக்கு போதுமான வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. விராட் கோலி கேப்டன்சியில் வேண்டுமென்றே இந்திய அணியில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவருக்கு பதிலாக விஜய் சங்கர் அணியில் சேர்க்க விராட் கோலி கிரீன் சிக்னல் கொடுத்தார். அந்த அதிருப்தியில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்தார் அம்பத்தி ராயுடு.
2. வருண் ஆரோன்
முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் வருண் ஆரோன், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஜொலிக்க முடியவில்லை. இந்திய அணிக்காக 2011 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அவர் தலா 9 டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடினார். அதன்பிறகு அவரை இந்திய அணியில் எடுக்கவில்லை அப்போது கேப்டனாக இருந்த எம்எஸ் தோனி. இதனால் இவரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் சீக்கிரமே முடிவுக்கு வந்தது.
3. மனோஜ் திவாரி
எம்எஸ் தோனி கேப்டன்சியில் அதிக வாய்ப்புகளை பெறாமல் போன மற்றொரு பிளேயர்களில் மனோஜ் திவாரியும் ஒருவர். இவர் 2008 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமானபோதும் 12 ஒருநாள் போட்டிகள் மட்டுமே விளையாடினார். 2011 ஆம் ஆண்டு டி20 போட்டிகளிலும் இந்திய அணிக்காக அறிமுகமான அவருக்கு 3 போட்டிகளுக்கு மேல் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
4. அமித் மிஸ்ரா
இந்திய அணிக்காக 2003 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான அமித் மிஸ்ரா, தொடர்ச்சியாக அடுத்தடுத்த தொடர்களில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இவருக்கு எம்எஸ் தோனி வாய்ப்புகளை கொடுக்கவே இல்லை. ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக பந்துவீசிய போதும், அமித் மிஸ்ராவுக்கு பதிலாக மற்ற சுழற்பந்துவீச்சாளர்களுக்கே அதிக வாய்ப்புகளை கொடுத்தார் தோனி.