பீகாரில் ரீல் தயாரிக்க முயன்ற 4 பேர் ஆற்றில் மூழ்கி பலி

பீகாரின் ககாரியா மாவட்டத்தில் நான்கு இளைஞர்கள் கங்கை ஆற்றில் மூழ்கி இறந்தனர், மேலும் இருவர் உள்ளூர் மக்களால் காப்பாற்றப்பட்டனர்.
இச்சம்பவம் மாவட்டத்தில் உள்ள பர்பட்டா காவல் நிலையத்திற்குட்பட்ட அகுவானி காட் பகுதியில் இடம்பெற்றது.
இளம் பெண் உட்பட 6 பேர் ரீல்(காணொளி) தயாரித்துக் கொண்டிருந்த வேளையில் இந்த விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அவர்களில் இருவரை உள்ளூர்வாசிகள் காப்பாற்றினர், ஆனால் மீதமுள்ள நான்கு பேரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
பலியானவர்கள் நிகில் குமார் (23), ஆதித்ய குமார் (18), ராஜன் குமார் (16), சுபம் குமார் (16) என அடையாளம் காணப்பட்ட நிலையில், ஷியாம் குமார் (24) மற்றும் அவரது உறவினர் சகோதரி சாக்ஷி குமாரி (16) ஆகிய இருவர் காப்பாற்றப்பட்டனர்.
(Visited 10 times, 1 visits today)