இந்தியாவில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 36 பேர் பலி
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் – தோடாவில் பேருந்து ஒன்று குன்றின் மீது விழுந்ததில் 36 பேர் உயிரிழந்ததாகவும், 19 பேர் காயமடைந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்த 19 பேரில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு பிராந்திய ஆணையர் ரமேஷ் குமார் கூறுகையில், படோட்-கிஷ்த்வார் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சாலையில் இருந்து சுமார் 300 அடி கீழே விழுந்ததாக கூறியுள்ளார்.
காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு ஹெலிகாப்டர் சேவை பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமும் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.





