அமெரிக்காவுடன் 32,000 கோடி ஒப்பந்தத்தில் கைச்சாத்து
இந்தியாவும் அமெரிக்காவும் செவ்வாயன்று (15) 32,000 கோடி இந்திய ரூபா மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
மூன்று சேவைகளுக்காக 31 பிரிடேட்டர் ட்ரோன்களை (ஆளில்லா விமானம்) கொள்வனவு செய்வதற்கும், நாட்டில் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மாற்றியமைக்கும் வசதியை அமைக்கும் நோக்கிலும் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
சிரேஷ்ட அதிகாரிகள் முன்னிலையில் இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானதாக இந்திய இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த வாரம், பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) 31 பிரிடேட்டர் ட்ரோன்கள் கொள்வனவுக்கு ஒப்புதல் அளித்தது.
இந்த 31 பிரிடேட்டர் ட்ரோன்களில் 15 இந்திய கடற்படைக்கு செல்லும், மீதமுள்ளவை விமானப்படைக்கும் இராணுவத்துக்கும் சமமாக பிரிக்கப்படும்.
(Visited 6 times, 1 visits today)