மத்தியப் பிரதேசத்தில் 3 மாத சிசுவை பாலியல் பலாத்காரம் செய்த 30 வயது நபர்
மத்தியப் பிரதேசத்தின்(Madhya Pradesh) மொரேனா(Morena) மாவட்டத்தில் 30 வயது நபர் ஒருவர் தனது மூன்று மாத மருமகளை மது போதையில் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
தாக்குதலுக்குப் பிறகு மாவட்ட மருத்துவமனையில் குழந்தை ஆபத்தான நிலையில் உள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர் சிசுவின் மாமா என்றும் இரு குடும்பங்களும் ஒரே வீட்டில் ஒன்றாக வசிக்கின்றனர் என்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுரேந்திர பிரதாப் சிங்(Surendra Pratap Singh) செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
குடிபோதையில் இருந்த குற்றம் சாட்டப்பட்டவர், குழந்தையை அவளுடன் விளையாடுவதாகக் கூறி அருகிலுள்ள அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.





