காங்கோ தலைநகர் வெள்ளத்தில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு: அதிகாரிகள் தெரிவிப்பு
காங்கோ ஜனநாயகக் குடியரசின் தலைநகர் கின்ஷாசாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதாக மாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
வார இறுதியில் பெய்த மழையால் வீடுகள் மற்றும் சாலைகள் சேதமடைந்தன.
“இறந்தவர்களின் எண்ணிக்கை தற்காலிகமானது, ஆனால் இதுவரை முப்பது பேர் இறந்துள்ளனர்” என்று பாட்ரிசியன் கோங்கோ அபாகாசி கூறினார்.
பல சுற்றுவட்டாரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.





