30 நாள் போர் நிறுத்த பேச்சுவார்த்தை : ரஷ்யா சென்றுள்ள ட்ரம்பின் தூதர்!

உக்ரைனில் முன்மொழியப்பட்ட 30 நாள் போர்நிறுத்தம் குறித்த விவாதங்களுக்காக ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்காஃப் மொஸ்கோவிற்கு பயணித்துள்ளார்.
விட்காஃபின் பயணம் “ரஷ்யாவை போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ளவும், உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்தவும் அழுத்தம் கொடுப்பதன் ஒரு பகுதியாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், அமெரிக்க பேச்சுவார்த்தையாளர்கள் வியாழக்கிழமை மாஸ்கோவிற்கு பயணம் செய்வதை உறுதிப்படுத்தினார்.
இந்த வார தொடக்கத்தில் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடந்த பேச்சுவார்த்தைகளின் போது அமெரிக்க மற்றும் உக்ரைன் அதிகாரிகள் மொத்தம் 30 நாள் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
(Visited 3 times, 3 visits today)