திருப்பதி விஷ்ணு கோவிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி
திருப்பதி விஷ்ணு நிவாசத்தில் வைகுண்டத்வார சர்வதரிசனம் டோக்கன் விநியோகத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
பக்தர்கள் கூட்டம் அலைமோதியதுடன், டோக்கன் வாங்கும் முயற்சியில் நெரிசல் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்த பக்தர்களில் ஒருவர் தமிழ்நாட்டின் சேலத்தைச் சேர்ந்தவர். மேலும் சம்பவத்தின் போது காயமடைந்த நான்கு பேர் சிகிச்சைக்காக ருயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
(Visited 34 times, 1 visits today)





