3 கோடி மதிப்புள்ள 6 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
ஷார்ஜாவில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு ஏர் அரேபியா விமானம் நேற்று அதிகாலை வந்தது.
அவ்விமானத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக உளவுத் துறையின் வருவாய் புலனாய்வு பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் விமானத்தில் வந்த பயணிகளை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.
அதில் 11 பயணிகளை சோதனை செய்ததில் அவர்களது பேண்ட் பைகளில் இருந்து தங்கம் மீட்கப்பட்டது.
மேலும் மலக்குடல், காலணிகள் மற்றும் ஜீன்ஸ் பேண்டுகளில் மறைத்து வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த 6.62 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த புலனாய்வு பிரிவு காவல் துறையினர் திருச்சி கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அர்ஜுன் என்பவரை கைது செய்தனர்.
மீதமுள்ள 10 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 3.8 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை விமான நிலையத்தில் 3.8 கோடி மதிப்புள்ள 6.62 கிலோ தங்கம் பிடிபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.