அமெரிக்காவில் இரண்டு வாரத்தில் மட்டும் 27 இளம் வயதுப் பிள்ளைகள் மாயம்..!
அமெரிக்க நகரமொன்றில், இரண்டு வாரங்களில் 27 பிள்ளைகள் வரை மாயமாகியுள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
அமெரிக்க மாகாணமான Ohioவிலுள்ள Cleveland நகரில், மே மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மட்டும், 12 வயது முதல் 17 வயதுவரையுள்ள சுமார் 30 பிள்ளைகள் வரை காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
பிள்ளைகள் எங்கு போனார்கள், என்ன ஆனார்கள் என்பது இதுவரை தெரியவில்லை. ஒருவேளை, இது கடத்தல் கும்பல் ஒன்றின் வேலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
காணாமல் போன பிள்ளைகள், போதைப்பொருள் கடத்தல், பாலியல் தொழில் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுத்தப்படுவார்களானால், அது குற்றச் செயல்களை மேலும் அதிகரிக்கும் என பொலிஸார் அச்சம் தெரிவித்துள்ளார்கள்.
(Visited 7 times, 1 visits today)