ஜெர்மனியில் சர்க்கஸ் நிகழ்ச்சியின் போது கீழே விழுந்து உயிரிழந்த 27 வயது ட்ரேபீஸ் கலைஞர்
கிழக்கு ஜெர்மனியின் பௌட்சனில் நடந்த சர்க்கஸ் நிகழ்ச்சியின் போது 27 வயது ட்ரேபீஸ் கலைஞர் ஒருவர் பார்வையாளர்கள் முன்னிலையில் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
மெரினா பி என்ற கலைஞர் பால் புஷ் சர்க்கஸில் தனி ட்ரேபீஸ் ஸ்டண்ட் செய்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஸ்பெயினின் மல்லோர்காவைச் சேர்ந்த மெரினா, ஐந்து மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன, ஆனால் மெரினா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஜெர்மனியின் சர்க்கஸ் சங்கத்தின் தலைவரான ரால்ஃப் ஹப்பர்ட்ஸ் மெரினாவுக்கு உடல்நலப் பிரச்சினை இருந்திருக்கலாம் என்று நம்புகிறார். மெரினா போன்ற நன்கு பயிற்சி பெற்ற கலைஞர் அந்த உயரத்தில் இருந்து விழுந்தால் உயிர் பிழைக்காமல் இருப்பது அசாதாரணமானது என்று குறிப்பிட்டுள்ளார்.





