இலங்கை

யாழில் இறந்தும் இருவரின் உயிரை காப்பாற்றிய 27 வயது இளைஞன்

வவுனியாவில் விபத்தில் சிக்கிய இளைஞன், இருவரின் உயிரை காப்பாற்றி , தனது மண்ணுலக வாழ்வை முடித்துக்கொண்டமை பலர் மத்தியில் துயரை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த இளைஞனின் பூதவுடலுக்கு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சத்திர சிகிச்சை கூடத்தில் வைத்தியர் குழாம் தமது இறுதி அஞ்சலியை செலுத்தி இருந்தனர்.

வவுனியாவை சேர்ந்த 27 வயதான ரவிராஜ் ராஜ்கிரண் என்ற இளைஞன் , விபத்தில் சிக்கிய நிலையில் , கடந்த 08ஆம் திகதி மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது மூளையின் செயற்பாடுகள் படிப்படியாக குறைவடைந்து மூளைச்சாவை அடைந்தார்.

அது தொடர்பில் இளைஞனின் பெற்றோருக்கு வைத்தியர்கள் அறிவித்ததை அடுத்து, குடும்பத்தினர் இளைஞனின் இரண்டு சிறுநீரகங்களையும் தானம் செய்ய முன் வந்தனர்.

அதனை அடுத்து இளைஞனின் இரண்டு சிறுநீரகங்களையும் மருத்துவக் குழு நேற்று (12) வெற்றிகரமாக சத்திரசிகிச்சை மூலம் அகற்றி, அவை 2 நோயாளிகளுக்கு மாற்று சிறுநீரகமாக வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டன.

அதேவேளை உயிரிழந்த ராஜ்கிரனுக்கு சத்திர சிகிச்சை கூடத்தில் வைத்தியர் குழாமால் இறுதி வணக்கம் செலுத்தப்பட்டது.

TK

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!