இந்தியா செய்தி

மகாராஷ்டிராவில் திருமண பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்ட 26 வயது நபர் அடித்துக் கொலை

திருமணம் குறித்துப் பேசுவதாகக் கூறி, பெண்ணின் குடும்பத்தினர் குறித்த நபரை அழைத்து, பின்னர் அவரை அடித்துக் கொன்றதாக மகாராஷ்டிரா காவல்துறை தெரிவித்துள்ளது.

அடித்து கொல்லப்பட்ட நபர் 26 வயது ராமேஷ்வர் கெங்காட் என அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த சம்பவம், புனே அருகே உள்ள பிம்ப்ரி சின்ச்வாட்டில் உள்ள சங்வி பகுதியில் இருந்து பதிவாகியுள்ளது.

இந்த வழக்கில் பெண்ணின் தந்தை உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னும் இரண்டு பேர் தலைமறைவாக உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

அவர்கள் அனைவருக்கும் எதிராக கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“ராமேஷ்வர் கெங்காட்டை அடித்துக் கொன்றதாக பெண்ணின் தந்தை பிரசாந்த் சர்சார் உட்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற இரண்டு குற்றவாளிகளைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது” என்று சங்வியின் மூத்த காவல் ஆய்வாளர் ஜிதேந்திர கோலி தெரிவித்தார்.

(Visited 1 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி