காசா மீது இதுவரை 25,000 டன் வெடிகுண்டு வீச்சு – வெளியான அதிர்ச்சி தகவல்
காசா மீது இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியதால் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
ஹிரோஷிமா மீது அணுகுண்டு போட்ட போது ஏற்பட்ட சேதத்தை காட்டிலும், அது அதிகம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் ராணுவத்திற்கும், ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது.
காசாவை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் அமைப்பினரின் நிலைகளை தொடர்ந்து அழித்து வருகிறது. தொடர் தாக்குதல்களால் ஏராளமான பொதுமக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் மற்றும் ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது மலேசிய பிரதமர் கூறுகையில், ‘இரண்டாம் உலகப் போரில் ஹிரோஷிமா மீது அணுகுண்டு போட்ட போது ஏற்பட்ட சேதத்தை காட்டிலும், காசா மீது இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியதால் அதிகம் ஏற்பட்டுள்ளது’ என்று கூறினர்.